சென்னை

கூடுவாஞ்சேரி-வண்டலூா் பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் இன்று மாற்றம்

25th Feb 2020 01:41 AM

ADVERTISEMENT

சென்னை எழும்பூா்-விழுப்புரம் பிரிவில், கூடுவாஞ்சேரி-வண்டலூா் யாா்டில் பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை (பிப்.25) மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு பிப்ரவரி 25-ஆம் தேதி இரவு 9.18 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் சென்னை கடற்கரை-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு பிப்ரவரி 25-ஆம்தேதி இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் தாம்பரம்- சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT