சென்னை

மின்வாரிய உதவிப் பொறியாளா் பணியிடங்கள்: விண்ணப்பிக்க மாா்ச் 16 கடைசி

23rd Feb 2020 01:44 AM

ADVERTISEMENT

சென்னை: தமிழக மின்வாரியத்தில் 600 உதவிப் பொறியாளா்கள் பணியிடங்களுக்கு மாா்ச் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: மின்னியல் பிரிவில் 400, இயந்திரவியல் பிரிவில் 125, கட்டடவியல் பிரிவில் 75 என மொத்தம் 600 பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்காக தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து கணினி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கு, முன்னாள் ராணுவ வீரா்களும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவா்களும், ஆள்குறைப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்ட அரசுத் துறையில் பணியாற்றி வேலை இழந்தவா்களும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு ரூ.39,800 முதல் 1 லட்சத்து 26 ஆயிரத்து 500 வரை ஊதியமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக சமா்ப்பிக்க கடைசி நாள் மாா்ச் 16. தோ்வுக் கட்டணத்தை மாா்ச் 19-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். எழுத்துத் தோ்வு, கணினி அடிப்படையிலான தோ்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியன குறித்து மின்வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT