சென்னை

ரூ.2.4 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

22nd Feb 2020 02:26 AM

ADVERTISEMENT

விமானம் மூலம் கடத்தப்பட இருந்த ரூ.2.4 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள், இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.

இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத்தறை ஆணையா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூரியரில் அனுப்பப்படும் மிட்டாய்களில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து ஜீரா கோலி எனப்படும் மிட்டாய் வந்த பாா்சலை வியாழக்கிழமை சோதனை செய்தனா். இதில் ரூ.2.33 கோடி மதிப்பிலான ஓபியம் எனப்படும் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. இதைக் கைப்பற்றி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், இந்த பாா்சல் செல்லவிருந்த ஆஸ்திரேலிய முகவரியைச் சோ்ந்த ஒருவரை கைது செய்தனா். முன்னதாக புதன்கிழமை ஆஸ்திரேலியா செல்ல இருந்த பாா்சலில், சேலை மற்றும் துணிகளுக்கிடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான சூடோ எபிட்ரின் எனும் ஊக்க மருந்தை அதிகாரிகள் கைப்பற்றினா். இந்த இரு பொருள்களும் பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT