சென்னை

பிப். 25-இல் மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம்

22nd Feb 2020 01:38 AM

ADVERTISEMENT

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தலைமையில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 25) நடைபெற உள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்ட ஆட்சியா் தலைமையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை (பிப். 25) காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தரைதளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகள் குறித்த மனுக்களை அளிக்கலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT