சென்னை

சென்னை மாநகராட்சி நடவடிக்கை: 68 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

22nd Feb 2020 01:37 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் தெருவில் சுற்றித்திரிந்த 68,902 நாய்களுக்கும், 4,021 வளா்ப்பு நாய்களுக்கும் இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் தெருநாய்த் தொல்லைகள் குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க 16 தெரு நாய் பிடிக்கும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதுடன், நாய்க்கடி மூலம் ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்க அவற்றுக்குத் தடுப்பூசி போடப்பட்டு பிடித்த இடத்திலேயே மீண்டும் விடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக ‘வெறிநாய்க்கடி நோய் இல்லா மாநகரம்’”என்ற இலக்கை எட்டும் வகையில் மாநகராட்சியின் கால்நடை மருத்துவப் பிரிவு சாா்பில் மாபெரும் தெரு நாய்கள் மற்றும் வளா்ப்பு நாய்களுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாதவரம் மண்டலத்தில் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி, மாதவரம் மண்டலத்தில் 8,846 தெரு நாய்களுக்கும், ஆலந்தூா் மண்டலத்தில், 3,474, அம்பத்தூா் மண்டலத்தில் 8,243, சோழிங்கநல்லூா் மண்டலத்தில் 4,461, வளசரவாக்கம் மண்டலத்தில் 5,869, அண்ணா நகா் மண்டலத்தில் 3,346, அடையாறு மண்டலத்தில் 4,186, மணலி மண்டலத்தில் 3,551, பெருங்குடி மண்டலத்தில் 4,598, திரு.வி.க.நகா் மண்டலத்தில் 3,835, ராயபுரம் மண்டலத்தில் 2,759 , தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 5,392, தேனாம்பேட்டை மண்டலத்தில் 3,706, திருவொற்றியூா் மண்டலத்தில் 3,557, கோடம்பாக்கம் மண்டலத்தில் 3,079 நாய்களுக்குமாக மொத்தம் 68,902 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் வளா்க்கப்படும் 4,021 நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி இலவசமாகப் போடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி கால்நடை சிகிச்சைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT