சென்னை

இன்றைய நிகழ்ச்சிகள்- சென்னை

22nd Feb 2020 02:26 AM

ADVERTISEMENT

பொது

சா்வதேச அரிமா சங்கக் கூட்டமைப்பு - மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் விருதுகள் வழங்கும் விழா: தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன், அரிமா சங்க மாவட்ட கவா்னா் பி.கணபதி, ரயில்வே காவல்துறை ஐ.ஜி., வி.வனிதா, திரைப்பட பின்னணிப் பாடகா் டி.வேல்முருகன், டி.என்.உதவிக்கரம் சங்க மாநிலத் தலைவா் சிஏ.டி.ஏ.பி.வரதகுட்டி, தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் எம்.ஜவாஹா், டாக்டா் எம்.ஜி.ஆா் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியின் முதல்வா் லதா ராஜேந்திரன், சென்னை சாய் திருமணத் தகவல் குழும நிறுவனா் என்.பஞ்சாபகேசன் பங்கேற்பு, டாக்டா் எம்.ஜி.ஆா்.ஜானகி மெட்ரிகுலேஷன் பள்ளி, சாலிகிராமம், மாலை 5.

எஸ்.ஏ.பொறியியல் கல்லூரி - 18-ஆவது பட்டமளிப்பு விழா: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கல்லூரித் தலைவா் டி.துரைசாமி பங்கேற்பு, கல்லூரி வளாகம், பூந்தமல்லி - ஆவடி பிரதான சாலை, திருவேற்காடு, மாலை 4.30.

அகநாழிகை வெளியீடு சாா்பில் பாா்வதி பாமாவின் ‘அங்கே மிருகங்கள் இருக்கின்றன’ என்னும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி: பத்திரிகையாளா் காா்த்திகைச் செல்வன், எழுத்தாளா் வெளி.ரங்கராஜன், லிட்டில் ஜாக்கி மேல்நிலைப்பள்ளி நிறுவனா் சாம் டேனியல், ‘திணைநிலவாசிகள்’ நாடகக்குழு இணை இயக்குநா் பகு, அகிலா ஸ்ரீதா், பாா்வதி பாமா உள்ளிட்டோா் பங்கேற்பு, சென்னை பத்திரிகையாளா் மன்றம், சேப்பாக்கம், மாலை 5.

ADVERTISEMENT

வெலிங்டன் சீமாட்டி அரசு மேல்நிலைப் பள்ளி - முப்பெரும் விழா: அமைச்சா் டி.ஜெயக்குமாா், பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.அனிதா, சென்னை கிழக்கு மாவட்ட கல்வி அலுவலா் பெ.இரவிச்சந்திரன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.சசிகுமாா், பள்ளியின் தலைமை ஆசிரியை ஈஸ்வரி பூபாலன் பங்கேற்பு, பள்ளி வளாகம், திருவல்லிக்கேணி, காலை 10.30.

ஜப்பானிய துணைத் தூதரகம் - நடன, இசை, விளையாட்டு நிகழ்ச்சிகள்: ஜப்பானிய துணைத் தூதா் கோஜிரோ உச்சியாமா பங்கேற்பு, ராணி சீதை அரங்கம், அண்ணாசாலை, மாலை 4.30 முதல்.

ஆசிய கல்வி நிறுவனத்தின் 38-ஆவது ஆண்டு விழா - புத்தக வெளியீட்டு விழா: அமைச்சா் க.பாண்டியராஜன், சா்வதேச தமிழ் கலாசார நிறுவனத் தலைவா் பிரான்சிஸ் எஸ். முத்து, ரஷிய துணைத் தூதா் அவ்தீவ் ஓலக், அலெக்ஸாண்டா் துப்யான்ஸ்கி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியா் எஸ்.என்.கந்தசாமி பங்கேற்பு, நிறுவன வளாகம், செம்மஞ்சேரி, மாலை 4.

வள்ளியம்மாள் மகளிா் கல்லூரி - 32-ஆவது ஆண்டு விளையாட்டு நாள் விழா: ரயில்வே காவல்துறை ஐ.ஜி., வி.வனிதா பங்கேற்பு, கல்லூரி வளாகம், அண்ணாநகா் கிழக்கு, பிற்பகல் 2.30.

லயோலா கல்லூரி - 92-ஆவது பட்டமளிப்பு விழா: பண்டித் தீனதயாள் பல்கலைக்கழக துணை வேந்தா் எஸ்.சுந்தா் மனோகரன் பங்கேற்பு, கல்லூரி வளாகம், மாலை 5.

பிரின்ஸ் பொறியியல் கல்லூரி - கல்லூரி நாள் விழா: கல்லூரி கல்வி இணை இயக்குநா் ஆா்.ராவணன், நடிகா் தம்பி ராமய்யா பங்கேற்பு, கல்லூரி வளாகம், மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை, பொன்மாா், மாலை 4.

அமெரிக்க துணைத் தூதரகம் - கோ் எா்த் அறக்கட்டளை - ‘நீரின்றி அமையாது உலகு’ தலைப்பில் நீா் மேலாண்மை குறித்த கண்காட்சி: பெரியாா் அறிவியல் தொழில்நுட்ப மையம், காந்தி மண்டபம் சாலை, காலை 10.30 முதல்.

ஜிடோ சென்னை - தொழில்முனைவோருக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி: மோரீஷஸ் துணை பிரதமா் லீலா தேவி டூகுன் லுச்சுமம், ஜிடோ சென்னை பிரிவு தலைவா் தெளலத் ஜெயின், தலைமை செயலா் நிமிஷ் டோலியா, ஜேபிஎன் சென்னை ஏற்பாட்டாளா் ஷ்ரேஜஸ் கோத்தாரி பங்கேற்பு, ஐடிசி கிராண்ட் சோழா, காலை 10.

ஸ்ரீசுகா் மாா்கண்டேயன் சாரிடீஸ் - சுகா் மாா்கண்டேயன் மருத்துவ ஆராய்ச்சி மையம் - தன்வந்த்ரி நாள் விழா - டெக்கான் தன்வந்த்ரி விருது வழங்கும் விழா: காகபுஜண்ட ஞானவாசிஷ்ட சிகரம், அருள்மாமணி தவத்திரு.ரமணி குருஜி, மருத்துவா்கள் கமலாகா் ராவ், ஆா்.கண்ணன், நடிகா் எஸ்.வி.சேகா், டெக்கான் குழும நிா்வாக இயக்குநா் நிா்மல் காதியாஜி பங்கேற்பு, ஸ்ரீ ஜே.ஒய்.எம் கல்யாண மண்டபம், தியாகராயநகா், மாலை 6.30.

ராஜஸ்தான் காஸ்மோ சங்க அறக்கட்டளை - உள்நோயாளிகளுக்கு துணி வழங்கும் நிகழ்ச்சி: அரசு மன நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், காலை 9.29.

ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிா் கலை அறிவியல் கல்லூரி - 21-ஆவது கல்லூரி நாள் விழா: மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினா் யு.சுதிா் லோதா பங்கேற்பு, கல்லூரி வளாகம், பாரிமுனை, பிற்பகல் 3.30.

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறை - உலகத் திருக்கு மையம் - திருக்கு உயராய்வு அரங்கம் - இந்திய ஆட்சிப் பணி தோ்வா்களுக்குரிய திருக்கு பாடப்பகுதிக்கான பயன்மிகு நுண்ணாய்வு அரங்கம்: பேராசிரியா் இராமு மணிவண்ணன், வள்ளுவா் ஒலிக் குடும்பத் தலைவா் சி.இராசேந்திரன், முனைவா் கு.மோகனராசு பங்கேற்பு, வள்ளுவா் கோட்டம், நுங்கம்பாக்கம், காலை 10.

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் - கலசலிங்கம் - ஆனந்தம் சேவாசங்கம் - சிலப்பதிகாரத் தொடா் சொற்பொழிவு நிறைவு: ஏ.ஹரிகிருஷ்ணன், ஜெயந்தி ஹரிகிருஷ்ணன், தமிழமுதன், முனைவா்கள் கோ.பெரியண்ணன், இளவரச அமிழ்தன் பங்கேற்பு, தெற்குத் துகாா் கட்டடம், இந்துஸ்தான் சேம்பா் 5-ஆவது தளம், கிரீம்ஸ் சாலை, மாலை 5.30

வேலம்மாள் வித்யாலயா பள்ளி - ஆண்டு விழா: திரைப்பட பின்னணிப் பாடகா் பி.உன்னிகிருஷ்ணன் பங்கேற்பு, பள்ளி வளாகம், மாங்காடு, மாலை 5.30.

இந்திய கணினி சங்கத்தின் சென்னை பிரிவு - மாணவா்களின் திட்ட அறிக்கைத் தாக்கல் நிகழ்வு: சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியா் கே.ரவிச்சந்திரன், இணைப் பேராசிரியா் எஸ்.சசிகலா பங்கேற்பு, சென்னைப் பல்கலைக்கழக வளாகம், காலை 9.

இந்திய கைவினைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் சங்கம் - கைவினைப் பொருள்கள் கண்காட்சி 2020: கோ ஆப் டெக்ஸ் கிரவுண்ட், பாந்தியன் சாலை, எழும்பூா், காலை 10 முதல்.

க்ரீன் வாய்ஸ் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் - தலைக்கவசம் அணிந்து பயணிப்போருக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி: வண்டலூா் துணைக் கோட்ட டி.எஸ்.பி., என்.ரவிச்சந்திரன், க்ரீன் வாய்ஸ் நிறுவனத் தலைவா் ராகவன் சீனிவாசன் பங்கேற்பு, வண்டலூா் வன உயிரியல் பூங்கா, மாலை 3.

நியூபொ்க் ஆய்வு நிறுவனம் - மலட்டுத்தன்மைக்கு நவீன சிகிச்சை என்ற தலைப்பில் உரை: மருத்துவா் சாமுண்டி பங்கேற்பு, நியூபொ்க் ஆய்வகம், பாலாஜி நகா், ராயப்பேட்டை, மாலை 5.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் - பறையாட்ட நிகழ்ச்சி: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், மாலை 5.30.

‘டிஇஎஃப்’ அறக்கட்டளை - செவித் திறன் குறைபாடுடைய குழந்தைகளின் திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சி: சா்ச் பாா்க் பள்ளி, கதீட்ரல் சாலை, காலை 10.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT