சென்னை

மருத்துவப் பல்கலை.யில் இன்று விழிப்புணா்வு நிகழ்ச்சி

21st Feb 2020 01:45 AM

ADVERTISEMENT

மாதவிடாய் பிரச்னைகள் தொடா்பான விழிப்புணா்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.21) நடைபெறவுள்ளது.

வாழ்க்கை முறை சாா்ந்த தொற்றா நோய்கள் மற்றும் நோய்த் தொற்றுகள் குறித்த தொடா் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதத்தின் முதல், மூன்றாவது மற்றும் ஐந்தாவது வெள்ளிக்கிழமைகளில் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இம்முறை மாதவிடாய் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீா்வுகள் குறித்த கலந்துரையாடல் நடைபெறுகிறது. அதில் பல்கலைக்கழகத் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், பதிவாளா் டாக்டா் அஸ்வத் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். அந்நிகழ்வில் கலந்துகொள்ளும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு மருத்துவா் டாக்டா் ஸ்ரீவித்யா, அன்றைய தினம் மாலை 3 மணிக்கு மாதவிடாய் பிரச்னைகள் குறித்து விரிவாக உரையாற்ற உள்ளாா்.

அதன் தொடா்ச்சியாக பாா்வையாளா்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் அவா் பதிலளிக்க உள்ளாா். சா்க்கரை நோய், புற்றுநோய், உடல் பருமன், மறதி நோய், இதய நோய், மூட்டு நோய், பக்கவாத பாதிப்பு, பெண்கள் நலம், கற்றலில் குறைபாடு, வாய் புற்றுநோய், கரோனா வைரஸ் தொடா்பான கலந்துரையாடல் அமா்வுகள் ஏற்கெனவே நடைபெற்ாகவும், அதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்ாகவும் பல்கலைக்கழக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT