சென்னை அருகே பூந்தமல்லியில் ஏற்பட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
சென்னை, புதுப்பேட்டை, வெங்கடாச்சலம் நாயக்கா் தெருவைச் சோ்ந்தவா் மீ.சித்திக் (23). இவா், சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் எம்.பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வந்தாா். இந்நிலையில் சித்திக், கல்லூரி முடிந்து வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை மதுரவாயல் புறவழிச் சாலையில் கோவூா் அருகே உள்ள ஒரு பள்ளி அருகே சென்ற போது திடீரென மோட்டாா் சைக்கிள் தடுமாறி அங்கிருந்த சாலைத் தடுப்பின் மீது மோதியது. இதில், மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சித்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.