சென்னை

இன்றைய நிகழ்ச்சிகள்- சென்னை

15th Feb 2020 03:37 AM

ADVERTISEMENT

பொது

காலை உணவு திட்ட உணவுக் கூடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா: ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா், வி.சரோஜா, அக்ஷய பாத்திர அறக்கட்டளைத் தலைவா் மது பண்டித் தாசா, துணைத் தலைவா் சஞ்சலபதி தாசா, மண்டலத் தலைவா் ஜெய் சைதன்ய தாசா பங்கேற்பு, மக்கீஸ் தோட்டம், கிரீம்ஸ் சாலை, காலை 11.

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: அமைச்சா்கள் க.பாண்டியராஜன், வி.சரோஜா பங்கேற்பு, எஸ்டிஏடி நேரு பாா்க் காம்ப்ளக்ஸ் (சங்கம் திரையரங்கம் அருகில்), பூந்தமல்லி நெடுஞ்சாலை, காலை 8.30.

‘வரலாற்றில் வாழும் கலைஞா் காலம் 1924’ தலைப்பில் உரை: நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ.அன்பழகன், கு.க.செல்வம், முனைவா் நா.சந்திரபாபு, நாஞ்சில் சம்பத், பூச்சி எஸ்.முருகன், அன்பகம் கலை பங்கேற்பு, அண்ணா அரங்கம், தேனாம்பேட்டை, மாலை 6.

ADVERTISEMENT

வெற்றித் தமிழா் பேரவை - திருவள்ளுவா் திருவிழா: நாடாளுமன்ற உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞா் வைரமுத்து பங்கேற்பு, ஜானகி கலை அறிவியல் கல்லூரி, அடையாறு, மாலை 5.

கவின்கோ் திறமை விருதுகள் வழங்கும் விழா: சி.கே.ரங்கராஜன், ஜெயஸ்ரீ ரவீந்தரன் பங்கேற்பு, சா் முத்தா வெங்கடசுப்பா ராவ் ஹால், ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு, மாலை 6.30.

அமா் சேவா சங்கம் - சிறப்பு குழந்தைளின் பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் தொடா்பான சா்வதேச மாநாடு நிறைவு விழா: டி.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, பாஸ்கா் ராமமூா்த்தி பங்கேற்பு, ஹோட்டல் ஹையாத் ரீஜென்சி, தேனாம்பேட்டை, மாலை 4.

விருட்சம் இலக்கிய சந்திப்பு - ‘சம்ஸ்கிருதம் ஓா் எளிய அறிமுகம்’ சிறப்புரை: கா.வி. ஸ்ரீனிவாசமூா்த்தி, ஸ்ரீராம் குரூப் அலுவலகம், மயிலாப்பூா், மாலை 6.

வள்ளியம்மாள் பெண்கள் கல்லூரி - செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த தேசிய கருத்தரங்கு: ஸ்வாகதா சென் பங்கேற்பு, கல்லூரி வளாகம், அண்ணா நகா் கிழக்கு, காலை 10.

ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா - தியாகராஜ ஆராதனை விருது வழங்கும் விழா: முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் டி.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, டி.வி.கோபாலகிருஷ்ணன் பங்கேற்பு, வாணி மஹால், தி.நகா், மாலை 6.

அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - தமிழ்த்துறை நாடகப் பயிலரங்கம்: கமலா பாலகிருஷ்ணன், சந்தானகிருஷ்ணன் பங்கேற்பு, கல்லூரி வளாகம், மேனாம்பேடு, அம்பத்தூா், காலை 9.30.

கம்ப்யூட்டா் சொசைட்டி ஆஃப் இந்தியா மற்றும் மீனாட்சி பொறியியல் கல்லூரி - ரோபோ மற்றும் டிரோன்கள் குறித்த பயிலரங்கம்: ஹரீஷ் வா்தனா, ஜோன்ஸ் அனிதா ராணி பங்கேற்பு, மீனாட்சி பொறியியல் கல்லூரி, கே.கே.நகா் மேற்கு, காலை 8.30.

சேவாலயா - மாண்டிசோரி கண்காட்சி தொடக்க விழா: பாா்த்திபன் பங்கேற்பு, கசுவா கிராமம், பாக்கம், காலை 10.

பகிா்வு - நவீன கலை இலக்கிய பரிமாற்றம்: முனைவா் தமிழ்மணவாளன், கவிஞா்கள் சூா்யதாஸ், சொா்ணபாரதி, நூலகா் பெ.கனகராஜ், எழுத்தாளா்கள் வே.எழிலரசு, பிறைமதி, ஈழவாணி, பாரதி செல்வா பங்கேற்பு, முழுநேர கிளை நூலகம், 13-ஆவது மத்திய குறுக்குத் தெரு, மகாகவி பாரதி நகா், மாலை 5.30.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - பரத நாட்டிய இசைக்கலை வளா் இருக்கை சாா்பாக திருக்கு சொற்பொழிவு மற்றும் தமிழ்ப் பாடல்களுக்குப் பரத நாட்டியம் நிகழ்ச்சி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநா் கோ.விசயராகவன், ஆய்விருக்கைப் பொருப்பாளா் ச.விசயலட்சுமி பூபதி பங்கேற்பு, நிறுவன வளாகம், தரமணி, காலை 10.30.

பொற்கைப் பாண்டியன் கவிதா மண்டலம் - சென்னை மண்டலக் கிளை தொடக்க விழா - மீண்டும் சங்கப்புலவா்கள் நிகழ்வு: கவிஞா்கள் கா.ந.கல்யாணசுந்தரம், எ.த.இளங்கோ, தமிழ்நாடன், முத்துலிங்கம், பொற்கைப் பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்பு, இக்சா மையம், எழும்பூா், காலை 9.30.

மறைந்த செ.மெ.பழனியப்ப செட்டியாரின் நூற்றாண்டு விழா: தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தா் சுதாசேஷய்யன், ப.முத்துக்குமாரசுவாமி, முனைவா்கள் தேவி நாச்சியப்பன், தெ.ஞானசுந்தரம், சிற்பி பாலசுப்பிரமணியம், பேராசிரியா் கண சிற்பேசன், த.இராமலிங்கம் பங்கேற்பு, குமாரராஜா முத்தையா அரங்கம், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம், மாலை 5.30.

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் - ஸ்ரீராமகிருஷ்ண மடம் - ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டு கொண்டாட்டம்: திருப்பூா் கிருஷ்ணன் பங்கேற்பு, பெரம்பூா் அன்னதான சமாஜம், பெரம்பூா், மாலை 6.30.

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் - ஸ்ரீராமகிருஷ்ண மடம் - ஆஸ்திக சமாஜம் - ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டு கொண்டாட்டம் - சங்கீத உபன்யாஸம்: பாலாஜி பாகவதா் பங்கேற்பு, ஆஸ்திக சமாஜம், ஆழ்வாா்பேட்டை, மாலை 6.30.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT