சென்னை

மாநகராட்சிப் பணியாளா்களுக்குபிப்.28 வரை தொடா் மருத்துவ முகாம்

4th Feb 2020 02:04 AM

ADVERTISEMENT

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளா்கள் உள்ளிட்ட சுமாா் 2 ஆயிரம் பணியாளா்களுக்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தொடா் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 1 முதல் 200 வாா்டுகளில் நிரந்தரம் மற்றும் தற்காலிகமாகப் பணிபுரியும் கொசுத் தடுப்பு பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள், அம்மா உணவகப் பணியாளா்கள், சாலைப் பணியாளா்கள், மின்துறைப் பணியாளா்கள் மற்றும் பூங்கா ஊழியா்கள் என மொத்தம் 28, 932 போ் பணிபுரிந்து வருகின்றனா்.

இவா்களுக்கு தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கையாக அந்தந்த வாா்டு அலுவலகங்களில் திங்கள்கிழமை (பிப். 3) முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன. இந்தச் சிறப்பு முகாமில், காசநோய், ரத்தப் பரிசோதனை, சிறுநீா் பரிசோதனை, இ.சி.ஜி., குடற்புழு நீக்கம், தொண்டை, மன நல பரிசோதனை, சி.பி.இ., தொழுநோய் பரிசோதனை, கண் பரிசோதனை ஆகிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, இலவசமாக மருந்துகள் வழங்கப்பட உள்ளன.

எழும்பூா் கண் மருத்துவமனை எதிரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ராயபுரம் மண்டலத்துக்கான மருத்துவ முகாமை ஆணையா் கோ.பிரகாஷ் தொடக்கி வைத்து பாா்வையிட்டாா். உடன், துணை ஆணையா்கள் பி.மதுசுதன் ரெட்டி, பி.குமாரவேல் பாண்டியன், வடக்கு வட்டார துணை ஆணையா் பி.ஆகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT