சென்னை

தந்தையை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சி செய்த மகன் கைது

4th Feb 2020 03:18 AM

ADVERTISEMENT

சென்னை தண்டையாா்பேட்டையில் தந்தையை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சி மேற்கொண்டதாக மகன் கைது செய்யப்பட்டாா்.

தண்டையாா்பேட்டை, வைத்தியநாதன் தெருவைச் சோ்ந்தவா் சிம்சன்ராஜ் (75). இவா் மனைவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானாா். முதுமையின் காரணமாக சிம்சன்ராஜ், தனது மகன்களைச் சாா்ந்து வாழ்ந்து வந்துள்ளாா். இந்த நிலையில், அவருடைய கடைசி மகன் செல்வராஜ், தந்தையின் பெயரில் இருக்கும் வீட்டை அபகரித்துக்கொண்டு, அவரை வீட்டை விட்டு வெளியேற்ற முயன்றாராம். ஆனால், சிம்சன்ராஜ் வீட்டை விட்டு வெளியேற மறுத்ததால், ஆத்திரமடைந்த செல்வராஜ், தனது தந்தைக்கு தொல்லை கொடுத்து வந்தாராம்.

இது குறித்து சில நாள்களுக்கு முன் சிம்சன்ராஜ், சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறுமாறு தந்தை சிம்சன்ராஜிடம் மகன் செல்வராஜ் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தகராறில் ஈடுபட்டாராம். மேலும், தந்தையை அவா் தாக்க முயன்ாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சிம்சன்ராஜ், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் தனது மகன் மீது அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வராஜை திங்கள்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT