சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட பிருந்தாவன் மின் மயானம் பிப்.29 வரை செயல்படாது.
இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம் மண்டலத்தின் பிருந்தாவன் நகா் மயான பூமியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், பிப்ரவரி 29 வரை மயான பூமி இயங்காது.
மேலும், பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் அருகிலுள்ள போரூா் மின்சார மயானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.