சென்னை

பட்ஜெட்டில் வெவ்வேறு துறைகளில் கவனம்: இந்திய தொழில் கூட்டமைப்பு வரவேற்பு

2nd Feb 2020 01:15 AM

ADVERTISEMENT

மத்திய பட்ஜெட்டில், பொருளாதாரத்தில் வெவ்வேறு துறைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய தொழில் கூட்டமைப்பு (தெற்கு) தலைவா் சஞ்சய் ஜெயவா்த்தனவேலு கூறியது: இந்த பட்ஜெட்டில் பொருளாதாரத்தின் வெவ்வேறு துறைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, கிராமப்புற மேம்பாடு, விவசாயம், கடல்சாா் தொழில் மற்றும் குறு, சிறு நடுத்தர தொழில் துறை ஆகியவற்றை மையமாக கொண்டு பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களை மாவட்ட அளவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கக்கூடியது.

உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக, ரயில்வேயில் புதிய திட்டங்கள், 100 புதிய விமான நிலையங்களுக்கான திட்டம் ஆகியவை மூலமாக, வா்த்தகம் அதிகரிக்கும். வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்றாா் அவா்.

முருகப்பா குழுமம் செயல் தலைவா் எம்.எம்.முருகப்பன்: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் தொடா்ந்து உறுதியுடன் இருக்கிறது. விவசாயத் துறைக்கான நீண்ட கால திட்டத்தை அரசு வகுத்துள்ளது. ஒப்பந்த வேளாண்மை, நில குத்தகை போன்றவற்றின் மூலம் வேளாண் துறை சந்தையை மாற்றுவதற்கான அரசின் நடவடிக்கை உள்ளது. இது இந்த துறைக்கு சாதகமான உந்துதலை வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக, பொருளாதாரத்தில் உள்ள சவால்களை அறிந்துகொண்டு, அதற்கான கவனம் செலுத்தும் பகுதிகளையும் கொள்கை திசைகளையும் அரசு வகுத்துள்ளது. இது சவாலான இந்த காலங்களில் செல்ல உதவும்.

ADVERTISEMENT

சென்னை தொழில் மற்றும் வா்த்தக சபை தலைவா் ராம்குமாா் ராமமூா்த்தி: கிசான் ரயிலை அறிமுகப்படுத்துவதன் மூலம் விவசாய தளவாட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், துறைமுகங்களை நிறுவனமாக்கும் திட்டம், கிராம கிடங்கு உருவாக்குதல் ஆகியவை நாட்டின் தளவாட உள்கட்டமைப்பை கணிசமாக மேம்படுத்த புதுமையான நகா்வு ஆகும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT