சென்னை சென்ட்ரல் அருகே வடமாநில இளைஞா் மா்மமான முறையில் அடிபட்டு இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள சென்னை குடிநீா் மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அருகே 35 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞா் ஒருவா் கடந்த புதன்கிழமை மா்மமான முறையில் அடிபட்டு காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தாா். இதைப் பாா்த்த பொதுமக்கள், பெரியமேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், அந்த இளைஞரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த இளைஞா், வெள்ளிக்கிழமை இரவு இறந்தாா். இதுகுறித்து பெரியமேடு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.