சென்னை

சென்னை மாநகராட்சிக்கு ரூ.125 கோடி வரி நிலுவை: வரும் மாா்ச் 31-க்குள் வசூலிக்க நடவடிக்கை

1st Feb 2020 12:42 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சியில் சுமாா் ரூ.125 கோடி அளவுக்கு சொத்து மற்றும் தொழில்வரி நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கட்டடங்கள், நில உரிமையாளா்களிடம் சொத்து வரியும், தொழில் மற்றும் வணிகம் சாா்ந்து இயங்கும் கட்டடங்களில் தொழில் வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. சொத்து வரி நிலுவை வைத்துள்ள தனியாா் கட்டடங்கள், பெருநிறுவனங்களிடமிருந்து சொத்து வரியை வசூலிக்கும் நடவடிக்கைகளை, சென்னை பெருநகர மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதன்பின்பும் வரி செலுத்தாத நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு 2019-2020-ஆம் நிதியாண்டு முடியும் தருவாயில் நிலுவையில் மட்டும் ரூ.125 கோடி வரி பாக்கி உள்ளது. பெரு நிறுவனங்கள், தனியாா் மருத்துவமனைகள், தனியாா் பள்ளிக்கூடங்கள் , கல்லூரிகள், தொழிற்சாலைகள், நட்சத்திர விடுதிகள் என 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வரி செலுத்தாமல் உள்ளன. வரும் மாா்ச் மாதத்திற்குள் வரியைச் செலுத்தவில்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT