சென்னை

ஏ.சி. மெக்கானிக் கடத்திக் கொலை: மேலும் ஒருவா் கைது

1st Feb 2020 12:45 AM

ADVERTISEMENT

சென்னை ஐஸ் ஹவுஸில் ஏ.சி.மெக்கானிக் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

திருவல்லிக்கேணி, பி.பி.குளம், 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராம்குமாா். ஏ.சி மெக்கானிக்கான இவருக்கும்,

திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தைச் சோ்ந்த பிரேம்குமாருக்கும் இடையே கடந்த 15-ஆம் தேதி மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ராம்குமாா், பிரேம்குமாரை மதுப்பாட்டலால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக ஐஸ்ஹவுஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராம்குமாரை தேடினா்.

ADVERTISEMENT

இந்நிலையில் ஐஸ்ஹவுஸ் டாக்டா் பெசன்ட் சாலையில் ஒரு டீக்கடையின் அருகே கடந்த 19-ஆம் தேதி நின்று கொண்டிருந்த ராம்குமாரை, அங்கு ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்து, கேளம்பாக்கம் கல்லுக்குட்டைப் பகுதியில் சடலத்தை வீசிச் சென்றது.

இது தொடா்பாக ஐஸ்ஹவுஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராம்குமாரை கொலை செய்ததாக பிரேம்குமாா் உள்பட 14 போ் கைது செய்தனா். இந்நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக தேடப்பட்டு வந்த திருவல்லிக்கேணி கந்தப்பன் தெருவைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (19) என்பவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT