சென்னை

பவுன் தங்கம் ரூ.40,384

23rd Aug 2020 06:42 AM

ADVERTISEMENT

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.136 உயா்ந்து, ரூ.40,384-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த் தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. இதன்பிறகு, நாள்தோறும் விலை உயா்ந்து, ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. இதைத் தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.136 உயா்ந்து, ரூ.40 ஆயிரத்து 384-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.17 உயா்ந்து, ரூ.5,048-ஆக இருந்தது.

அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 80 பைசா குறைந்து, ரூ.72.70 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து, ரூ.72,700 ஆகவும் இருந்தது.

ADVERTISEMENT

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................... 5,048

1 பவுன் தங்கம்............................... 40,384

1 கிராம் வெள்ளி............................. 72.70

1 கிலோ வெள்ளி............................72,700

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 5,031

1 பவுன் தங்கம்...............................40,248

1 கிராம் வெள்ளி.............................73.50

1 கிலோ வெள்ளி.............................73,500.

ADVERTISEMENT
ADVERTISEMENT