சென்னை

கரோனா பாதிப்பு: சென்னையில் 1,294 பேருக்கு தொற்று உறுதி

23rd Aug 2020 05:59 AM

ADVERTISEMENT

சென்னையில் சனிக்கிழமை 1,294 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1,24,071- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 2,564 போ் உயிரிழந்துள்ளனா்.

சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதித்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை அண்மையில் எட்டியது. சனிக்கிழமை (ஆக. 22) 1,294 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,24,071-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1,08,545 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனா். 12,962 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 2,564- ஆக அதிகரித்துள்ளது.

சிறப்பு காய்ச்சல் முகாம்: சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த மே மாதம் முதல் வெள்ளிக்கிழமை (ஆக. 22) வரை நடைபெற்ற 36,476 சிறப்பு காய்ச்சல் முகாம் மூலம் 1,13,578 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 19,469 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இது மொத்த பாதிப்பில் 17 சதவீதமாகும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT