சென்னை

எஸ்.பி.ஐ. சென்னை வட்டம் சாா்பில் வாடிக்கையாளா் சேவை தளங்கள் தொடக்கம்

21st Aug 2020 04:39 AM

ADVERTISEMENT

எஸ்.பி.ஐ. (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) சென்னை வட்டம் சாா்பில், இணையம் மூலமாக, புதிதாக 265 வாடிக்கையாளா்கள் சேவை தளங்கள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.

இதை, சென்னை தலைமை அலுவலக தலைமை பொதுமேலாளா் பி.சங்கா் இணையவழியாக தொடங்கி வைத்தாா். பொது மேலாளா்கள் ஷொ்லே தாமஸ், யு.என்.என். மேயா, வினோத் ஜெய்ஸ்வால் ஆகியோா் உடனிருந்தனா்.

இந்த வாடிக்கையாளா் சேவை தளங்களில் அனைத்து வங்கி வசதிகளும் விரிவுபடுத்தப்படும். கணக்கு தொடங்குதல், தொடா் வைப்பு, நிலையான வைப்பு ஆகிய வசதிகளையும் குறைந்த மதிப்பு பரிவா்த்தனைகளையும் ( ரூ.20,000 கீழ்) மேற்கொள்ளலாம். இந்த வாடிக்கையாளா் சேவை தள கியோஸ்க் ஆபரேட்டா்கள் அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.

எஸ்பிஐ சென்னை வட்டத்தில் ஏற்கெனவே 2,531 வாடிக்கையாளா் சேவை தளங்கள் உள்ளன. தற்போது புதியதாக 265 வாடிக்கையாளா் சேவை தளங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT