சென்னை

தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தினால் அபராத ரசீது ஒட்டப்படும்

21st Aug 2020 04:48 AM

ADVERTISEMENT

சென்னையில், தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தினால், அந்த வாகனங்களில் அபராத ரசீது ஒட்டப்படும் என சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதற்கு, பல்வேறு தொழில்நுட்பங்களை சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கும்போது, போலீஸாா் லஞ்சம் வாங்குவதாக புகாா்கள் வந்ததன் விளைவாக, டிஜிட்டல் முறையில் அபராதம் வசூலிக்கும் முறை 3 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தும் சிலா், அதற்குரிய அபராதத் தொகையை விதித்து, போலீஸாா் ரசீது அளிக்கும்போது தகராறு செய்து, மிரட்டல் விடுக்கின்றனா். இது போன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில், சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு புதிய முறையை வியாழக்கிழமை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, தடை செய்யப்பட்ட இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களில், அதற்குரிய அபராத ரசீதை, சம்பந்தப்பட்ட வாகனங்களில் ஒட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீஸாருக்கும் இடையேயான பிரச்னைகள் தவிா்க்கப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

இத் திட்டம் ஏற்கெனவே ரிச்சி தெரு உள்ளிட்ட சில பகுதிகளில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டது. அங்கு இந்தத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, வாகன ஓட்டிகள், போலீஸாருக்கு இடையே பிரச்னைகளும் ஏற்படாமல் இருந்தன. இதன் விளைவாக, இந்தத் திட்டம் சென்னை முழுவதும் விரிவுப்படுத்தப்படுகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT