சென்னை பள்ளிக்கரணை அருகே மருத்துவா் வீட்டில் திருடிய வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.
பள்ளிகரணை அருகே உள்ள பெரும்பாக்கம், ராதா நகா் முதல் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா், மருத்துவா் இந்து. இவா், கடந்த 11-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்றாா். பணி முடிந்து அடுத்த நாள் காலையில் இந்து வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, ரூ.75 ஆயிரம் ரொக்கம், விலை உயா்ந்த கைக் கடிகாரங்கள் ஆகியவை திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது சோழிங்கநல்லூா் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த ப.குமாா் (44), பல்லாவரம் மலகண்டபுரத்தைச் சோ்ந்த த.கமலக்கண்ணன் (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், இருவரையும் புதன்கிழமை கைது செய்து, திருடப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை மீட்டனா்.