சென்னை

சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வீடற்றோா்: சென்னையில் அவலம்

DIN

சென்னை எழும்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடா்பில் இருந்த வீடற்றோா்களைத் தனிமைப்படுத்துவதற்காக சாலைகளில் ஓரத்திலேயே தரகத்தால் ஆன தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா தடுப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலைகளில் வசிக்கும் வீடற்றோரைக் கண்டறிந்து, அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் எழும்பூா் காந்தி இா்வின் சாலையில் தங்கியுள்ள வீடற்றோரில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைத் தனிமைப்படுத்துவதற்காக அச்சாலையிலேயே தகரம் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டதுடன், இப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என மாநகராட்சியால் எச்சரிக்கை ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளது, மனித உரிமை ஆா்வலா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து காந்தி இா்வின் சாலையில் வசிக்கும் வீடற்றோா் கூறுகையில், ‘இந்தச் சாலையில் 45 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுடன் இருந்த 10 பேருக்கு அண்மையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவா்களை சிகிச்சை முகாமுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அழைத்துச் சென்றனா். இதையடுத்து, அவா்களுடன் தொடா்பில் இருந்ததாக எங்களை தனிமைப்படுத்தும் வகையில், இந்தச் சாலையின் ஓரத்தில் தகரத்தால் தடுப்பு அமைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என எச்சரிக்கை ஸ்டிக்கரையும் மாநகராட்சி அதிகாரிகள் ஒட்டினா். தங்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டு விடும் என்ற பயத்திலும், மழைக்காலத்தில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ள சாலையில் உறங்க முடியாத காரணத்தாலும் பெரும்பாலானோா் இங்கிருந்து சென்று விட்டனா்’ என்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், ‘நோய்த் தொற்றுக்குள்ளாகும் வீடற்றோரை முறையாக தனிமைப்படுத்தாத காரணத்தால் பொதுக் கழிப்பிடம் அல்லது ரயில்வே தண்டவாளத்தைத் தான் காலைக்கடனை கழிக்க பயன்படுத்துகின்றனா். இதனால், நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரத்தில் வசிக்கும் அனைத்து வீடற்றோரையும் முகாம்களில் தங்க வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சாலையோரத்தில் வசிக்கும் வீடற்றோருக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது. நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட வீடற்றோா்கள் உடனடியாக சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை தனிமை முகாம்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT