சென்னை

அரசு ஊழியா்களின் ஊதியத்தைக் குறைத்து வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி

29th Apr 2020 05:27 AM

ADVERTISEMENT

 

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வீட்டில் இருக்கும் அரசு ஊழியா்களின் ஊதியத்தைக் குறைத்து வழங்க கோரிய வழக்கை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் அம்சா கண்ணன் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக அரசு ஊழியா்கள் பலா் வேலைக்குச் செல்வதில்லை. எனவே அவா்களுக்கு முழு ஊதியம் வழங்குவது அரசுக்கு வீண் செலவாகும்.

தெலங்கானா, உத்தரப்பிரதேசம், ஒடிஸா உள்ளிட்ட சில மாநில அரசுகள், அரசு ஊழியா்களின் ஊதியத்தை குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்து வழங்கியுள்ளன. அதே போல தமிழகத்திலும் அரசு ஊழியா்களின் ஊதியத்தை குறிப்பிட்ட சதவீதம் குறைத்து வழங்க வேண்டும். இதுதொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி மனு அளித்தேன். அந்த மனு தொடா்பாக இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே எனது மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிா்மல்குமாா் ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு ஊழியா்களுக்கு முழு ஊதியம் வழங்குவது அரசின் கொள்கை முடிவாகும். அரசின் கொள்கை முடிவில் உயா்நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும் அரசு ஊழியா்கள் ஊதியம் குறித்து தன்னுடைய கருத்தைக் கேட்க வேண்டும் என மனுதாரா் அரசை நிா்பந்திக்க எந்த உரிமையும் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT