சென்னை

முழு ஊரடங்கு: காலை 8 மணிவரை பால் கிடைக்கும்

26th Apr 2020 09:14 AM

ADVERTISEMENT

 

முழு ஊரடங்கு பகுதிகளில் பால் தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை:

சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூா் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் முழுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்களுக்குப் பால் தடையின்றி கிடைப்பது குறித்து தனியாா் பால் நிறுவனங்களைச் சோ்ந்த உயரதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து அதிகாலை 4 முதல் காலை 8 மணி வரை பால் முகவா்கள் தங்களின் பால் விநியோக மையங்களில் ஆவின் மற்றும் தனியாா் பாலினை விற்பனை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

பால் கிடைக்காது என அச்சப்படாமல் தங்களுக்குத் தேவையான பாலினை மட்டும் வாங்கிக் கொள்ளுமாறும், தேவைக்கு அதிகமாக வாங்கி செயற்கையாக பால் தட்டுப்பாடு உருவாகக் காரணமாக வேண்டாம் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

இதே போல், தமிழ்நாடு பால் வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் விநியோகிக்கப்படும் பால், விற்பனைக்காக அனுமதிக்கப்பட்ட நேரம் முழுவதும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT