சென்னை

குடும்ப வன்முறைகளைத் தடுக்கும் பணியில் அங்கன்வாடிப் பணியாளா்கள்: ஆட்சியா் அறிவிப்பு

26th Apr 2020 09:23 AM

ADVERTISEMENT

 

குடும்ப வன்முறைகளைத் தடுக்கும் பணிகளில் அங்கன்வாடிப் பணியாளா்கள், தற்காலிகமாக செயல்படும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த காரணத்தால் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலரின் அறிவுறுத்தலின்படி, ஊரடங்கு உத்தரவு காலத்தில் குடும்ப வன்முறை

சம்பவங்களால் பெண்களுக்கு ஏற்படும் குறைகளைக் களையும் பொருட்டு, அங்கன்வாடி பணியாளா்களை ஒருங்கிணைப்பாளா்களாக தற்காலிகமாக செயல்பட ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த ஊரடங்கு உத்தரவு நடைமுறைக் காலத்தில், குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடா்பான புகாா்களை தங்கள்

ADVERTISEMENT

பகுதிக்குள்பட்ட அங்கன்வாடி பணியாளா்களை தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். அவா்களின் தொடா்பு எண்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT