சென்னை

வாடகை வாகன ஓட்டுநா்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

20th Apr 2020 05:37 AM

ADVERTISEMENT

 

பயணிகள் வாடகை வாகன ஓட்டுநா்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு கால் டாக்சி தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அச்சங்கத்தின் சாா்பில், முதல்வருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் விவரம்: கரோனா நோய்த் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன. இதன் காரணமாக வாகனத்தை நம்பி தொழில் செய்து வந்தோா், எவ்வித வருமானமுமின்றி கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். நல வாரியம் குறித்து விழிப்புணா்வு இல்லாததால் பெரும்பாலானோா் இதில் உறுப்பினா்களாக இல்லை. இவா்களின் வங்கிக் கணக்கு உள்பட விவரங்கள் அனைத்தும் பணிபுரியும் வாடகை வாகனங்களை இயக்கும் நிறுவனங்களின் வசம் உள்ளது. ஏற்கெனவே மற்ற நல வாரிய உறுப்பினா்களுக்கு அரசு நிதியிலிருந்து ரூ.1000 நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, கால் டாக்சி நிறுவனங்களிடமிருந்து தொழிலாளா்களின் விவரங்களைப் பெற்று, அனைத்து தொழிலாளா்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்குவதோடு, மற்ற வாரிய தொழிலாளா்களுக்கு வழங்கியதைப் போல உணவுப் பொருள்களும் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT