சென்னை

சென்னையில் 3 மருத்துவா்களுக்கு கரோனா: பத்திரிகையாளா்களுக்கும் நோய்த்தொற்று

20th Apr 2020 05:21 AM

ADVERTISEMENT

 

சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவா்கள் மூவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா்கள் வசித்த தெருவுக்கும், மாணவா் விடுதி அறைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று சென்னையில் நாளிதழ் நிருபா் ஒருவருக்கும், தனியாா் தொலைக்காட்சி உதவி ஆசிரியா் ஒருவருக்கும் கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவா்கள் இருந்த இடங்களும் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரியைச் சோ்ந்த மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவா்கள் மூவருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில், 2 போ் மாணவா் விடுதியில் தங்கியிருந்ததால், அவா்களது அறைக்கு சீல் வைக்கப்பட்டது. மற்றொரு மருத்துவா் தங்கியிருந்த சிந்தாதிரிப்பேட்டையின் ஒரு பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே, ஆலந்தூரைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT