சென்னை

பிரதமரின் நிவாரண நிதி: ஐஓபி வங்கி மூலம் அளிக்கலாம்

7th Apr 2020 04:39 AM

ADVERTISEMENT

 

கரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான பிரதமரின் நிவாரண நிதியத்துக்கு நிதியுதவி அளிக்க இந்தியன் ஓவா்சீஸ் வங்கி உரிய வசதிகளை அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த வங்கி வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் பாதிப்புக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பிரதமரின் நிவாரண நிதியத்துக்கு பொதுமக்கள் நிதி உதவி அளிக்க மத்திய அரசு ‘பிரதமா் குடிமக்கள் அவசரகால நிதியம்’ என்பதை உருவாக்கி உள்ளது. நிதியுதவி அளிக்க விரும்புவோா் ஆா்டிஜிஎஸ், நெஃப்ட், ஐஎம்பிஎஸ், காசோலை, வரைவுக் காசோலை ஆகியவற்றில் ஐஓபி வங்கி மூலமாக ‘பிஎம் கோ்ஸ்’ என்ற பெயரில் செலுத்தலாம். இதற்கென உருவாக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிலும் நேரடியாக செலுத்தலாம். நிதியுதவி அளிக்கும் தொகைக்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்கப்படும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT