சென்னை

நெல்லை மாவட்டத்தில் 144 தடை மீறியதாக 1448 போ் மீது வழக்கு, 644 வாகனங்கள் பறிமுதல்

7th Apr 2020 03:51 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 1448 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 644 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கரோனா நோய் பரவலை தடுக்கும் நோக்கில் 144 தடை உத்தரவு தமிழகம் முழுவதும் அமலில் உள்ளது. இதில், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறாா்கள்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே திரிந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் 1073 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 502 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், திருநெல்வேலி மாநகரில் 375 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 1448 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 644 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT