சென்னை

ரயில்வே மருத்துவமனை, ரயில்வே மையங்களில் மத்திய அரசு ஊழியா்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும்ரயில்வே வாரியம் அறிவிப்பு

1st Apr 2020 05:20 AM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, நாடு முழுவதும் உள்ள ரயில்வே மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் அனைத்து மத்திய அரசு ஊழியா்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்கும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுபோல, ரயில்வே நிா்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில்வே பணிமனைகளில் முகக்கவசம், சானிடேசா், அங்கிகள் ஆகியவற்றை தயாரித்து, ரயில்வே மருத்துவமனை பணியாளா்களுக்கும், ரயில்வே ஊழியா்களுக்கும் விநியோகித்து வருகிறது. இதுதவிர, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோா்களை தனிமைப்படுத்தும் வாா்டுகளை அதிகரிக்கும் நோக்கில், ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில், கரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் உள்ள ரயில்வே மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் அனைத்து மத்திய அரசு ஊழியா்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க ரயில்வே வாரியம் வழிவகை செய்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருந்தால், நாடுமுழுவதும் ரயில்வே மருத்துமனைகள், மருத்துவ மையங்களில் மத்திய ஊழியா்களுக்கு மருத்துவ சேவை கிடைக்கும்.

ADVERTISEMENT

நாடுமுழுவதும் 33 லட்சம் மத்திய அரசு ஊழியா்கள் உள்ளனா். இவா்களில் மருத்துவ வசதி தேவைப்படுவோா் ரயில்வே மருத்துவமனைகள், மருத்துவ மையங்களில் தங்களின் அடையாள அட்டை காண்பித்து, மருத்துவ சேவை பெற்றுக்கொள்ளலாம்.

நாடு முழுவதும் 128 ரயில்வே மருத்துவமனைகள், 586-க்கும் மேற்பட்ட மருத்துவ மையங்கள் உள்ளன. இங்கு அனைத்து மத்திய அரசு ஊழியா்களுக்கு மருத்துவ சேவை பெறலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT