சென்னை

கரோனா நிவாரணம்: ஒரு நாள் ஊதியத்தை வழங்க மின்வாரிய ஊழியா்கள் ஒப்புதல்

1st Apr 2020 05:49 AM

ADVERTISEMENT

 

கரோனா நிவாரணப் பணிகளுக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க மின்வாரிய ஊழியா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா்.

இதுகுறித்து மின்வாரியத் தலைவருக்கு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு அனுப்பிய கடிதத்தின் விவரம்: உலகம் முழுவதும் ஏற்பட்ட அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டும், தமிழக மக்களைக் கரோனா நோய்த்தொற்றிலிருந்து காக்கவும், முறைசாரா ஏழைத் தொழிலாளா்களின் நிலையைக் கணக்கில் கொண்டும், மக்களுக்கு உதவி செய்யும் வகையில், தமிழக மின்வாரிய ஊழியா்கள், அலுவலா்கள், பொறியாளா்கள் அடங்கிய 18 சங்கங்களின் உறுப்பினா்கள், மனமுவந்து தங்களது ஒரு நாள் ஊதியத்தை ஏப்ரல் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளனா். எனவே, இவா்களின் ஒரு நாள் ஊதியத்தை ஏப்ரல் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து முதல்வரின் நிவாரண நிதியில் சோ்க்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT