சென்னை

விஷவாயு தாக்கி தொழிலாளி பலி

22nd Sep 2019 04:25 AM

ADVERTISEMENT

சென்னை மாம்பலத்தில் கிணறு தூர்வாரும்போது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்தார். 
மாம்பலம் லட்சுமி நாராயண தெருவைச் சேர்ந்தவர் ந.நாகேஷ்வர ராவ். இவர் வீட்டில் உள்ள கிணற்றை தூர் வாரும் பணியில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ரா.சுப்பிரமணி (48), ரா.சந்திரசேகர் (35), ர.பாலசுந்தரம் (56) ஆகியோர் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது கிணற்றில் இருந்து வெளியான விஷவாயுவை சுவாசித்த சுப்பிரமணி மயங்கினார். இதையடுத்து சந்திரசேகர், பாலசுந்தரம் ஆகியோர் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். 
தகவலறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் மயங்கிக் கிடந்த சுப்பிரமணியை மீட்டனர். ஆனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அவர் சிறிது நேரத்தில் இறந்தார். இதுகுறித்து அசோக் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT