சென்னை

கடற்கரை-வேளச்சேரி பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் இன்று மாற்றம்

22nd Sep 2019 04:50 AM

ADVERTISEMENT

சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.22) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை-வேளச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பராமரிப்பு ஞாயிற்றுக்கிழமை (செப்.22) காலை 7.50 முதல்  பிற்பகல் 1.50 வரை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக,  இரு மார்க்கங்களிலும் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு காலை 8, 8.20, 8.40, 9.00, 9.20, 9.40,  10.00, 10.20, 10.40, முற்பகல் 11, 11.20, 11.40, நண்பகல் 12, 12.20, 12.40, மதியம் 1, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. தொடர்ந்து, பிற்பகல் 2 மணி முதல்  சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
 மறுமார்க்கமாக, வேளச்சேரி-சென்னை கடற்கரைக்கு காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30,  10.50 முற்பகல் 11.10, 11.30, 11.50, நண்பகல் 12.10, 12.30, 12.50, மதியம் 1.10, 1.30, 1.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.  
தொடர்ந்து, வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 2.10 மணி முதல் மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT