சென்னை

செப்.24-இல் சிறப்பு குறைதீர் கூட்டம்

22nd Sep 2019 04:30 AM

ADVERTISEMENT

வடசென்னை வருவாய்க் கோட்டம் சார்பிலான சிறப்பு குறைதீர் கூட்டம், செப். 24-ஆம் தேதி நடைபெறுகிறது. 

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்ட செய்தி:
வடசென்னை வருவாய் கோட்டம் சார்பில் சிறப்புக் குறைதீர்வு கூட்டம் மற்றும் சீராய்வுக் கூட்டம், வரும் 24-ஆம் தேதி,  திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வடசென்னை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் திருவொற்றியூர் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு ஜாதிச்சான்று, வாரிசுச் சான்று, பட்டா மாறுதல், நிலம் தொடர்பான கணினி திருத்தம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை தொடர்பான தங்களது கோரிக்கைகளை கோட்ட அலுவலரிடம் மனுவாக நேரில் அளித்துப் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது..

ADVERTISEMENT
ADVERTISEMENT