சென்னை

கட்டணத்தை முன்னதாக செலுத்தலாம்: மின்வாரியம்

22nd Sep 2019 12:27 AM

ADVERTISEMENT

மின்கட்டணத்தை முன்பணமாகச் செலுத்தி மின்துண்டிப்பை தவிர்க்குமாறு நுகர்வோருக்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. 
இது குறித்து அதன் செய்திக்குறிப்பு:  வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்கள் முதலிய தாழ்வழுத்த (எல்டி) மின்நுகர்வோர், தங்களின் மின்கட்டணத்தை முன்பணமாக செலுத்த மின்கட்டண வசூல் மையங்களிலும், இணையதள வாயிலாகவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு முன்பணம் செலுத்துவதால், உரிய நேரத்தில் பணம் செலுத்தாததால் ஏற்படும் மின்துண்டிப்பு தவிர்க்கப்படுகிறது. செலுத்திய மின்கட்டண முன்பணத்துக்கு மின்நுகர்வோர் வட்டி பெறுவதோடு எதிர்வரும் மின்கட்டணத் தொகையில் சரிசெய்யப்படும். நீண்ட நாள்களாக மின் நுகர்வோர் வீட்டில் இல்லாத பட்சத்தில் அவர்கள் செலுத்திய மின்கட்டண முன்பணத்திலிருந்து எதிர்வரும் மின்கட்டணத் தொகையை மின்கட்டண முன்பணத்திலிருந்து தானாக ஈடுசெய்யப்படும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT