சென்னை

எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப் பணி: 900 கிலோ குப்பை சேகரிப்பு

22nd Sep 2019 04:41 AM

ADVERTISEMENT

இந்திய கடலோரப் பாதுகாப்புப் படை சார்பில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியில் 900 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டன. 

சர்வதேச கடலோர தூய்மை தினத்தையொட்டி, இந்திய கடலோரப் பாதுகாப்புப் படை சார்பில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த தூய்மைப் பணியை கடலோரப் பாதுகாப்புப் படை (கிழக்கு) ஐஜி எஸ்.பரமேஷ் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்.
இதில், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிலையம், வளங்களுக்கான தேசிய ஆராய்ச்சி மையம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதில், 900 கிலோ மக்கா குப்பைகள் சேகரிக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT