சென்னை

பூக்களின் விலை சரிவு

22nd Sep 2019 04:44 AM

ADVERTISEMENT

பூக்களின் விலை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 1,889 காய்கறிக் கடைகள், 470 பூக்கடைகள் உள்ளன.  80 சதவீதம் சரிவு: சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை 80 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளன. புரட்டாசி மாதம் என்பதால் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறாது. அதிகபட்சமாக சனிக்கிழமைகளில் கோயிலில் சிறப்பு பூஜைகளும், முன்னோர்களுக்கு வழிபாடு மட்டுமே நடைபெறுவதால் இந்த விலை வீழ்ச்சி எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து 
பூ வியாபாரிகள் சங்கத்தினர் கூறியதாவது:-
இதுவரை பூக்கள், இவ்வளவு விலை வீழ்ச்சியை சந்தித்ததில்லை. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் கடுமையான நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். 
அனைத்து வகை பூக்களும் ரூ.200 க்கு குறைவாகவே விற்கப்படுகின்றன. இந்த மாதத்தில் மீதமுள்ள நாள்கள் இதே நிலை நீடிப்பதோடு, அடுத்த மாதம் ஆயுத பூஜை சமயத்தில் சிறிது விலை உயர வாய்ப்புள்ளது. அதன் பின்னரும் பூக்கள் விலை குறைந்தே காணப்படும் என்றார். 
பூக்களின் விலை (கிலோவில்): சாமந்தி ரூ.30, ரோஜா-ரூ. 20, அரளி-ரூ. 50-70, சம்பங்கி ரூ.30, மல்லி ரூ.60-80, செண்டு மல்லி ரூ.10, கனகாம்பரம் ரூ.150-200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT