வன உயிரின வாரம்: மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள்

வன உயிரின வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, விநாடி - வினா போட்டி உள்ளிட்ட போட்டிகள்  கிண்டி சிறுவர் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.

வன உயிரின வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, விநாடி - வினா போட்டி உள்ளிட்ட போட்டிகள்  கிண்டி சிறுவர் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.
இதுகுறித்து சென்னை மாவட்ட வன உயிரின காப்பாளர் பத்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 வன உயிரின பாதுகாப்பு மற்றும் புறச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
அதன் ஒருபகுதியாக பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு வன உயிரின வாரத்தையொட்டி, வனம் மற்றும் உயிரினங்கள்; நீரின்றி அமையாது வாழ்வு; மனித - விலங்கு மோதல்கள் உள்ளிட்ட தலைப்புகளில் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, வினாடி-வினா ஆகியவை மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள் கிண்டி சிறுவர் பூங்காவில் நடைபெற்றது. அதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதில் சிறப்பிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்குத் தேர்வாக உள்ளனர். அதில் வெற்றி பெறுவர்களுக்கு அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com