சென்னை

வியாபாரி வீட்டில் நகை,பணம் திருட்டு

10th Sep 2019 04:56 AM

ADVERTISEMENT

சென்னை அருகே ஆவடியில் வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
ஆவடி காமராஜ்நகர் குருவம்மா தெருவைச் சேர்ந்தவர் மா.மணி (28). இவர் குடிநீரை அடைத்து விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை வீட்டின் கதவு திறந்துவைத்துவிட்டு, குளிக்கச் சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர், குளித்துவிட்டு மணி வெளியே வந்தார். அப்போது வீட்டில் சில பொருள்கள் சிதறி கிடப்பதையும், பீரோவில் இருந்த ரூ.22 ஆயிரம் ரொக்கம், 5 பவுன் தங்கநகைத் திருடப்பட்டிருப்பது தெரியவந்ததது. ஆவடி  போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT