சென்னை

சிங்கப்பூரிலிருந்து கடத்தல்:  ரூ.32 லட்சம்  தங்கம் பறிமுதல்

10th Sep 2019 04:57 AM

ADVERTISEMENT


சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ. 32 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு  சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராவுத்தர் நைனா முகமது (37), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நூர் முகமது (59) ஆகிய இருவரை சந்தேகத்தின்பேரில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில், அவர்கள் இருவரும் உடலுறுப்பில் மறைத்து வைத்து ரூ. 32 லட்சம் மதிப்பிலான 810 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதேபோல், பைகளில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான  பயன்படுத்தப்பட்ட 20  மடிக்கணினிகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 

ADVERTISEMENT
ADVERTISEMENT