சென்னை

ரூ.80 லட்சம் கொள்ளை: 5 பேர் கைது

7th Sep 2019 04:12 AM

ADVERTISEMENT


சென்னை மண்ணடியில் பணப்பரிமாற்ற நிறுவனத்தில் ரூ. 80 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் பணப்பரிமாற்ற நிறுவனம் நடத்தி வருபவர் அபு. இவரது அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ரிஸ்வான்(24) ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
 கடந்த மாதம் 24-ஆம் தேதி அபு அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம கும்பல் ரிஸ்வானை தாக்கிவிட்டு, அங்கு இருந்த ரூ. 80 லட்சத்தை  கொள்ளையடித்துச் சென்றது. இது தொடர்பான புகாரின் பேரில் வடக்கு கடற்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.  முதற்கட்ட விசாரணையில் கொள்ளை போனது ஹவாலா பணம் என்பது தெரியவந்தது. மேலும் மண்ணடி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி,  ஆய்வு செய்தபோது ரெட்டேரியை சேர்ந்த கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், செல்லிடப்பேசி சிக்னலை வைத்து கொள்ளை கும்பலைச் சேர்ந்த பிரகீஷ், பாலாஜி, ரஞ்சித், சதீஷ், அஜித் ஆகிய 5 பேரை தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.8 லட்சம் ரொக்கம்,  ஆட்டோ, ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT