சென்னை

கடற்கரை யார்டில் பராமரிப்பு பணி: ரயில் சேவையில் சிறிது மாற்றம்

7th Sep 2019 04:09 AM

ADVERTISEMENT


சென்னை கடற்கரை யார்டில் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை அதிகாலையில் 3 மணி நேரத்துக்கு தண்டவாள பராமரிப்புப் பணி நடக்கவுள்ளது. இதன் காரணமாக ரயில் சேவையில் சிறிது  மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பகுதி ரத்து: கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரைக்கு செப்டம்பர் 
6, 7-ஆகிய தேதிகளில் இரவு 9.45 இயக்கப்படும் ரயில் மாற்றிவிடப்பட்டு, மூர் மார்க்கெட் வளாகத்துக்கு வந்து சேரும். இந்த ரயில் கொருக்குபேட்டை- சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
சென்னை கடற்கரை- அரக்கோணத்துக்கு செப்டம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் அதிகாலை 1.25 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில், சென்னை கடற்கரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து புறப்பட்டு அரக்கோணம் சென்றடையும். மேலும், இந்த ரயில் சென்னை கடற்கரை-வண்ணாரப்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT