சென்னை

அனுமதியின்றி புதைக்கப்பட்டுள்ள கேபிள்களுக்கு வாடகை செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும்: சென்னை மாநகராட்சி நிர்வாகம்

7th Sep 2019 03:14 AM

ADVERTISEMENT


சென்னையில் அனுமதியின்றி புதைக்கப்பட்டுள்ள கேபிள்களுக்கு வாடகை செலுத்தாவிட்டால், அவற்றின் இணைப்பு துண்டிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சிப் பகுதியில் கண்ணாடி இழை கேபிள்கள் மற்றும் தொலைக்காட்சி கேபிள்கள் சுமார் 5,316 கி.மீ. நீளத்துக்கு அமைக்க 26 நிறுவனங்கள் அனுமதி பெற்றுள்ளன. மாநகராட்சியிடம் உரிய அனுமதியின்றி புதைக்கப்பட்டுள்ள கேபிள் குறித்து அண்மையில் கணக்கீடு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சியில் உள்ள 34,893 தெருக்களில் இதுநாள் வரை 8,505 தெருக்களில் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வின்படி, அனுமதியின்றி சுமார் 4,449 கி.மீ. நீளத்துக்கு கேபிள்கள் அமைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 20 நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சுமார் 1,361 கி.மீ. நீளத்துக்கு கேபிள்களை பதித்துள்ளது தெரியவந்துள்ளது.
மாநகராட்சியிடம் குறிப்பிட்ட நீளத்துக்கு அனுமதி பெற்று அதைவிட  கூடுதலான அளவுக்கு கேபிள்கள் பதித்துள்ள நிறுவனங்கள் அவற்றுக்கான வாடகையைச் செலுத்தவும், மாநகராட்சியிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் கேபிள்கள் அமைத்துள்ள நிறுவனங்கள் அனுமதி பெற்று வாடகையைச் செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதையும் மீறி வாடகை செலுத்தாதபட்சத்தில் அவற்றின் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT