சென்னை

50 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்:ரூ.30 ஆயிரம் அபராதம்

4th Sep 2019 04:28 AM

ADVERTISEMENT


சென்னை பாண்டி பஜார் கடைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சோதனையில் 50 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பாண்டி பஜார் பகுதியில் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். துணிக் கடை, உணவகம், பழக்கடை, அலங்காரப் பொருள்கள் விற்பனைக் கடை என 20-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இவற்றில், 5 கடைகளில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட 50 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து இதுநாள் வரை 2.64 லட்சம் கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT