சென்னை

மெட்ரோ ரயிலில் கல்விச் சுற்றுலா: 4,850 மாணவர்கள் பயணம்

4th Sep 2019 04:31 AM

ADVERTISEMENT


சென்னை மெட்ரோ ரயிலில் கல்விச் சுற்றுலாவுக்காக ஆகஸ்ட் மாதத்தில் 4,850 மாணவ, மாணவிகள் உற்சாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை நகரில் மெட்ரோ ரயில் தொடர்பாக அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும்  மாணவ, மாணவிகளுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக மாதந்தோறும் கல்வி சுற்றுலாவை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் மற்றும் பரங்கிமலை வரையும், வண்ணாரப்பேட்டையில் இருந்து ஏஜி டி.எம்.எஸ். வழியாக விமான நிலையம் வரையும் கல்விப்பயணமாக மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதில், மெட்ரோ ரயிலின் சிறப்பு அம்சங்கள் பற்றி விளக்கப்படுகின்றன. 
இந்நிலையில், 2019-20-ஆம் ஆண்டில் கல்விச் சுற்றுலா மேற்கொள்ள அரசு, மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, கடந்த  ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4,850 மாணவ, மாணவிகள் கல்விப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். நிகழாண்டில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மொத்தம் 13,554 மாணவ, மாணவிகள் ரயிலில் பயணித்து மகிழ்ந்தனர். 2018-19-ஆம் கல்வி ஆண்டில் மொத்தம் 31,178 மாணவ, மாணவிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT