சென்னை

மகளிர் உயிர்ம வேளாண் சந்தை: செப். 6-இல் தொடக்கம்

4th Sep 2019 04:30 AM

ADVERTISEMENT


தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 6) முதல் ஞாயிற்றுக்கிழமை (செப். 8) வரை மூன்று நாள்களுக்கு மகளிர் உயிர்ம வேளாண் சந்தை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநிலம் முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினர் உற்பத்தி செய்யும் பொருள்களை சந்தைப்படுத்தும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 6) முதல் ஞாயிற்றுக்கிழமை (செப். 8) வரை மூன்று நாள்களுக்கு மகளிர் உயிர்ம வேளாண் சந்தை நடைபெற உள்ளது.
இந்தச் சந்தையில் கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள், அரிசி வகைகள், செடிகள், விதைகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், சிறுதானியங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள், காகிதப் பைகள், துணிப் பைகள், பாக்கு மரப் பொருள்கள், பனை ஓலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதன் ஒருபகுதியாக சனிக்கிழமை (செப். 7) பாரம்பரிய உணவுப் பொருள்களுக்கான சமையல் பயிற்சி,  மருத்துவர் சிவராமனின் சிறப்புரை நடைபெற உள்ளது. 
ஞாயிற்றுக்கிழமை மாடித்தோட்டம் குறித்த பயிற்சியும், மருத்துவர் சுல்தான் இஸ்மாயிலின் சிறப்புரையும் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் 97875 04035, 044 28171705 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT