சென்னை

போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுஅதிகாரிகளுக்கு பயிற்சி

4th Sep 2019 04:29 AM

ADVERTISEMENT


சென்னையில் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இது குறித்த விவரம்:
சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலைய அதிகாரிகளுக்கு விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களைக் கண்டறிவது தொடர்பான பயிற்சி முகாம், வில்லிவாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இந் நிகழ்ச்சிக்கு போக்குவரத்துப் பிரிவின் வடக்கு மண்டல இணை ஆணையர் எம்.வி.ஜெயகௌரி தலைமை வகித்தார். துணை ஆணையர் லட்சுமி முன்னிலை வகித்தார்.
 இந்தப் பயிற்சி முகாமில் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் என 84 பேர் பங்கேற்றனர். 
 முகாமில், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிவது குறித்தான பயிற்சி அளிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT