சென்னை

திமுகவில் இணைந்தார் அமமுக மாவட்டச் செயலர்

4th Sep 2019 04:28 AM

ADVERTISEMENT


அமமுகவின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பரணி கார்த்திகேயன், அந்தக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தார்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ரத்தினசபாபதியின் சகோதரர் பரணி கார்த்திகேயன். அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். அங்கு சில நாள்களாக கட்சி பணிகள் எதிலும் தீவிரம் காட்டாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் சுப்புலெட்சுமி ஜெகதீசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எ.வ.வேலு, ரகுபதி, காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT