சென்னை

தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற இளைஞரை பிடித்த பொதுமக்கள்

4th Sep 2019 04:27 AM

ADVERTISEMENT


சென்னை பூக்கடையில் தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
தேனாம்பேட்டை பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் ஜா.ஜான்சன் (24). இவர் திங்கள்கிழமை பூக்கடை ரத்தன் பஜார் சந்திப்பில் நின்றபோது, ஜான்சன் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை ஒரு இளைஞர் பறிக்க முயன்றார். ஜான்சன் சத்தம் போடவே,  பொதுமக்கள், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 
விசாரணையில், பிடிபட்ட இளைஞர் பெரம்பலூர் மாவட்டம்,  அங்கனூர் பகுதியைச் சேர்ந்த க.கலைமணி (34) என்பது தெரியவந்தது.  அவருக்கு வேறு ஏதேனும் தங்கச் சங்கிலி பறிப்பு குற்றங்களில் தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT