சென்னை

சாலை விபத்தில் முதியவர் பலி

4th Sep 2019 04:27 AM

ADVERTISEMENTசென்னை அருகே மேடவாக்கத்தில் அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கம் அண்ணா நகர் 3-ஆவது தெருவை சேர்ந்தவர் நீலகண்டன் (70).  இவர் கடந்த மாதம் மாலையில் மேடவாக்கத்தில், வேளச்சேரி பிரதான சாலையில் சாலையைக் கடந்தபோது தாம்பரத்திலிருந்து பள்ளிக்கரணை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியது. பலத்த காயமடைந்த நீலகண்டனை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு  சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த நீலகண்டன் செவ்வாய்க்கிழமை இறந்தார். இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டியை தேடி வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT